search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீம் இந்தியா"

    நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் 10 அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதின.

    முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.

    இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.

    ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
    பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் பீதி அடைய தேவையில்லை என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா 179 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும், உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் பீதி அடைய தேவையில்லை என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன். இது ஒரு நீண்ட தொடர். இதுபோன்று சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெறலாம்.

    முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். என்ன மாதிரியான ஆடுகளம் என்பதை புரிந்து கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள் பீதி அடைய தேவையில்லை.

    பெரும்பாலான அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் லெவனை (11 வீரர்களை) முடிவு செய்ய விரும்பாது. பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.



    ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும வகையில் விளையாடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது. மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது. அந்த அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெண்டுல்கர் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வமற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நாளை வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 நாடுகளும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்-  வங்காளதேசம் அணிகள் மோதிய நேற்றைய பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி கடந்த 25-ந்தேதி நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

    நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மட்டுமே நேர்த்தியாக விளையாடினார்கள். இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.



    இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை (28-ந்தேதி) எதிர் கொள்கிறது. இதனால் வங்காள தேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அவசியமாகும். இதில் திறமையாக ஆடினால்தான் உலகக்கோப்பையில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். இதனால் இந்திய வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.

    நாளை நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- இலங்கை, இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதுவோம் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் மிகப்பெரியதாக கருதப்படும்.

    அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான். இரு அணி ரசிகர்களும் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக்கோப்பை போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 6 போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதும் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

    தொடர் தோல்விக்கு இந்த உலகக்கோப்பையில் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவை வீழ்த்துவதை போல் மற்ற அணிகளையும் வீழ்த்தி சாத்தியக்கூறு பாகிஸ்தான் அணியிடம் உள்ளது.



    15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வது எளிது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது ஒன்றும் அப்படி அல்ல. ஏனென்றால், ஏகப்பட்ட நெருக்கடி உள்ளது. உதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், முகமது அமிர், ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி போன்ற வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.’’ என்றார்.

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். இதனால் இன்சமாம் உல் ஹக் மீது கடும் விமர்சனம் எழும்பியது குறிப்பிடத்தக்கது.
    கலீல் அகமது வீசிய பந்து விஜய் சங்கர் கையை பலமாக தாக்கியது. இதில் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இந்த போட்டிக்கான வலைப்பயிற்சியில் விஜய் சங்கர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் வலது கையை (Forearm) பலமாக தாக்கியது.

    இதனால் அவர் வலியால் துடித்தார். அவர் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ? என்ற அச்சம் நிலவியது. இதனால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.



    இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடவில்லை. 28-ந்தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களம் இறங்கும் வீரர் யார் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் விராட் கோலி தலைமையிலான அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்திய அணி கடந்த 11 ஒருநாள் தொடரில் 10 தொடர்களை வென்றுள்ளது. ஆனாலும் 4-வது வரிசையில் விளையாடும் திடமான வீரர் குறித்து இன்றும் முடிவுக்கு வந்த பாடில்லை.

    கடந்த அக்டோபரில் அம்பதி ராயுடு 4-வது வரிசையில் களம் இறங்க கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரோகித் சர்மா சமீபத்தில் பேசும்போது, “டோனிதான் 4-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவர்” என்று அவரது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். இதேபோல் தினேஷ் கார்த்திக்கும் அந்த வரிசையில் நன்றாக ஆடக்கூடியவர்.

    உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 4-வது வரிசையில் விளையாடும் வீரர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 4-வது வீரர் வரிசை குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    கடந்த 6 போட்டிகளை வைத்து பார்க்கும்போது (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) 4-வது வரிசையில் ஆடும் வீரரை திடப்படுத்த வேண்டியுள்ளது. அம்பதி ராயுடு நன்றாக விளையாடும்போது அவர்தான் சரி என்ற நம்பிக்கை வருகிறது.

    தினேஷ் கார்த்திக்கும் நல்ல நிலையில் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரை 4-வது வரிசையில் இறக்கலாம். மிடில் ஆர்டரை மாற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் நம்பிக்கையுடன் ஆடுவார். டோனி பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். ஆகவே அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால் 4-வது வீரர் வரிசைப்பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து தீவிரமாக விளையாட வேண்டும். பந்துவீச்சில் முகமது‌ ஷமி, புவனேஸ்வர் குமார் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்த்திக் பாண்டியாவும் நன்றாக வீசினார். குல்தீப் யாதவ், சாஹல் தரமான பந்து வீச்சாளர்கள். ஒட்டு மொத்தமாக வீரர்களின் செயல்பாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
    அடிலெய்டில் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என அணி விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி - டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 112 பந்தில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்திருந்தது. 38 பந்தில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அப்போது டோனி 34 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

    தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். டோனி 20 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்குப்பின் நிருபர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தன்னை 6-வது இடத்தில் களம் இறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டோனி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்டு இன்னிங்ஸ் போன்று அவர் ஏற்கனவே பலமுறை விளையாடியுள்ளார். ஆகவே. டோனி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிப்பதை பார்க்க சிறப்பாக இருந்தது. நெருக்கடியை புரிந்துகொண்டு, சரியான நேரம் வரும்போது எதிரணிக்கு பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். இதுதான் எப்போதும் அவருடைய பலம். அடிலெய்டு போட்டி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

    அவருடைய திட்டம் அவருக்குத் தெரியும். என்னுடைய திட்டம் எனக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருந்தோம். இன்னும் 10 ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படி ரன்கள் அடிப்பது என்று டோனி நினைக்கவில்லை. ஆனால், தற்போது பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார் என்பது குறித்துதான் யோசித்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பந்தை வெற்றிகரமாக தூக்கியடித்தால் போதும் என்று எனக்கும் டோனிக்கும் தெரியும். அதனால் நாங்கள் நெருக்குடிக்குள்ளாகவில்லை. எங்களை ஒரு பந்தை கூட தூக்கி அடிக்க விடக்கூடாது என்ற நெருக்கடி பந்து வீச்சாளருக்குத்தான் இருக்கும். ஒரு தவறு செய்தால், அதை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கெள்வோம். அப்படித்தான் டோனி முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.



    போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கான திறமை மிக முக்கியமானது. போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஏராளமான அனுபவங்கள் உதவும். கிரிக்கெட் போட்டியில் மிகவும் கடினமான திறமை அது. போட்டியை வெற்றிகரமாக முடிக்கும்போது, அணியின் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பு.

    அணி நிர்வாகம் தற்போது போட்டியை வெற்றிகரமாக முடிப்பதுதான் வேலை என்று என்னிடம் கூறியுள்ளது. என்னால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை அணி விரும்புகிறது. அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் என்ன நினைக்கிறார்களோ? அதை என்னால் முடிந்த அளவிற்கு அளிக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    சர்வதேச போட்டியில் நீண்ட நாட்கள் ஜொலிக்க முடியாது என்ற எனது கணிப்பு தவறு என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார் என கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார். #Bumrah #KapilDev
    ‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன்னுடைய அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி 2018-ல் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில் பும்ரா குறித்த என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது என கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் ‘‘நான் தவறாக கணித்து விட்டேன் என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார். நான் அவரை முதன்முறையாக பார்க்கும்பொழுது, அவர் பந்து வீசும் முறையை வைத்து நீண்ட நாட்களாக சர்வதேச போட்டியில் சாதிக்க இயலாது என்று கணித்தேன். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு தலை வணங்குகின்றேன். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பந்து வீசி வரும் அவரை உண்மையிலேயே பாராட்டுகிறேன். அவரது மனநிலை மிகவும் வலிமையாக உள்ளது.



    பும்ரா மிகவும் அற்புதமானவர். குறைந்த தூரத்தில் இருந்து ஓடிவந்து அவரால் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வேகத்தில் பந்து வீச முடியும் என்றால், நாம் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பும்ரா ஸ்பெஷலான தோள்பட்டையை பெற்றுள்ளார். இதுபோன்ற பந்து வீச்சாளர்கள் சிறப்புக்குரியவர்கள். புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பான பவுன்சர்களை வீசுகிறார்’’ என்றார்.
    இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

    நவம்பர் 21-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை சுமார் இரண்டு மாதம் விளையாடுகிறது. இந்த தொடர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குமிடையில் கையெழுத்து ஆகியிருக்கும். அதில் வீரர்களுக்கான தங்குமிடும், அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள், சாப்பாடு மெனு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.


    கோப்புப்படம்

    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது. அதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில்தான் வீரர்களுக்கான உணவு மெனுவில் இருந்து மாட்டிறைச்சியை நீக்க கூறியதாக கூறப்படுகிறது. அதற்குப்பதில் வெஜிடேரியன் மெனுவை அதிகரித்துள்ளது.
    ×